அல்வா கொடுத்து வாக்கு சேகரித்த டான்ஸ் மாஸ்டர் கலா!Kala master halwa election champign

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா அல்வா கொடுத்து வாக்கு சேகரித்துள்ளார்.

18 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Election champign

ஒவ்வொரு கட்சியின் முக்கிய தலைவர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இதில், தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி பாஜக கூட்டணி சார்பாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சௌமியா அன்புமணி மற்றும் அவரது மகள்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக பிரபல சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலா மாஸ்டர் பொது மக்களுக்கு அல்வா ஊட்டி விட்டுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.