" சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்" அவங்கள மட்டும் சேர்த்துக்காதீங்க CM விஜய்! தவெக வின் ரகசியத்தை போட்டு உடைத்த கோடீஸ்வரன்....!!!



journalist-kodeeswaran-criticises-aiadmk-and-advises-tv

தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பல்வேறு அதிரடி கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மற்றும் தவெக-வின் எதிர்கால அரசியல் பாதை குறித்து அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர் அரசியல்வாதிகளின் அழைப்புக்கு மரியாதை காட்டி நடந்து கொள்வதை தேவையில்லாமல் விமர்சிப்பது தவறு என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி சம்பவம் செய்யும் செங்கோட்டையன்! 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைவு! எல்லையற்ற மகிழ்ச்சியில் விஜய்!

“அதிமுகவில் குழப்பமே அதிகம்”

திமுகவின் அமைப்பு வலுவாக இருக்கும் சூழலில், அதிமுகவில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களின் அழுத்தங்களுக்கு இபிஎஸ் அடிபணிவதாக கோடீஸ்வரன் குற்றம்சாட்டினார். மேலும், தகுதியான நிர்வாகிகளை புறக்கணித்து சிலரை கட்சியில் இணைப்பது அவரது முரண்பாடான அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.

அதிமுகவிலிருந்து விலகி தவெக-வை நோக்கி நகர முயற்சிக்கும் சில தலைவர்களின் செயல்பாடுகளை அவர் “சந்தர்ப்பவாத அரசியல்” என சாடினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சரவை பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தை மனதில் வைத்து கட்சி மாறுவது தூய்மையான அரசியல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

“தவெக-வில் அடித்தட்டு தொண்டர்களுக்கே முன்னுரிமை வேண்டும்”

தவெக வளர்ச்சிக்காக ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கே முழு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோடீஸ்வரன் வலியுறுத்தினார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் தலைவர்கள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கட்சியின் கொள்கைகளையும் எதிர்கால திசையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், விஜய் தனது கட்சியில் ஏழை மற்றும் சாதாரணத் தொண்டர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதன் மூலம் பணக்காரர்களின் ஆதிக்கத்தை குறைத்து, கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்க்கு இரண்டு முக்கிய ஆலோசனைகள்

தவெக தலைவர் விஜய் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய இரண்டு விஷயங்களையும் கோடீஸ்வரன் எடுத்துரைத்தார். முதலில், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களையோ அல்லது சர்ச்சைக்குரிய தொழில்களில் ஈடுபட்டவர்களையோ கட்சியில் சேர்க்கக் கூடாது என்றார்.

அதேபோல், தேர்தல் நிதி என்ற பெயரில் பெரிய தொகை பணம் வழங்கும் நபர்களை நம்பாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். பணமும் பணக்காரர்களும் மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது என்பதை உணர்ந்து, விஜய் துணிச்சலான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும் என தனது கருத்தை நிறைவு செய்தார்.

 

இதையும் படிங்க: எடப்பாடி கனவு தூள் தூள்ளானது.... ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது! எடப்பாடி மீதுள்ள குமுறலை கொட்டிய செங்கோட்டையன்.!!!