அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்த முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி!!!
அதிமுகவில் உட்கட்சி அதிருப்தி தொடர்ந்து வெளிப்பட்டு வரும் நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளரும் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நேரடியாக விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை”
அதிமுகவில் உண்மையாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும், பணம் மற்றும் வெளிப்படையான ஆடம்பரத்தை காட்டுபவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் ஜவஹர் அலி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறுபான்மையினருக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி..!!!
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும், கட்சிக்குள் அவர்களின் பங்களிப்பு மதிக்கப்படுவதில்லை என்றும் ஜவஹர் அலி பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் தொடர்ந்து கட்சியில் நீடிக்க விருப்பமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகல்
இதையடுத்து, அதிமுகவின் அனைத்து கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலகுவதாக ஜவஹர் அலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மூத்த சிறுபான்மையின தலைவர் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைத்து விலகியிருப்பது, அதிமுக உள்கட்டமைப்பில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.