புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஜார்கண்ட் முதல்வரின் கையில், கலைஞரின் புத்தகம்..! வைரல் புகைப்படம்.!
பதவியேற்கும் நிகழ்வு :
சமீபத்தில் ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்ற போது, அதில் ராகுல் காந்தி, உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது உதயநிதி, தேஜஸ்வி யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்தார்.
முன்னிலையில் உதயநிதி :
தொடர்ந்து அவர் ஜார்கண்ட் முதல்வருக்கு கலைஞரின் புத்தகம் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் முன்னணி படுத்தப்படுகிறார். இதுவரை முதல்வர் மட்டும் பங்கேற்று வந்த அரசு சுற்றுப்பயணங்கள் ஆய்வுகள் உள்ளிட்டவற்றில் உதயநிதியும் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: பதறி ஓடி, செருப்பை எடுத்த சேகர் பாபு.. கேஷுவலாக நடந்த ஸ்டாலின்.. தீயாக பரவிய அமைச்சரின் வீடியோவால் சர்ச்சை.!
தமிழகம் தாண்டி பறக்கும் உதயநிதி :
தமிழகம் மட்டுமல்லாமல் அரசு சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி கலந்து கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் இன்று ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் உதயநிதி கலந்து கொண்டுள்ளார். தற்போது இது சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் உதயநிதியின் இந்த முன்னிலையை திமுகவினரும் ஆதரிப்பதாக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பினரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு எதிராக போராடிய 20 வழக்கறிஞர்கள் கைது.! நீதிமன்றத்தில் சர்ச்சை.!