ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு காத்திருந்து அரசியலுக்கு வரும் இவர்களின் செயல் அநாகரீகச்செயல்.! சசிகலா தம்பி மகன் பரபரப்பு பேச்சு.!

ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு காத்திருந்து அரசியலுக்கு வரும் இவர்களின் செயல் அநாகரீகச்செயல்.! சசிகலா தம்பி மகன் பரபரப்பு பேச்சு.!


jai anandh talk about rajini kamal

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் "போஸ் மக்கள் பணியகம்" என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போஸ் மக்கள் பணியகம் ஏழை எளிய வாழ்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களுக்கு பொறுப்பாளர்கள் மூலம் நேரில் சென்று உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். சசிகலா தம்பி திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட விரிசல் காரணமாக திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அதில், அவர் மகன் ஜெய் ஆனந்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

jai anandhஅதிமுகவின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று டிசம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் பேசுகையில், அணைத்து கட்சியினரும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருவது எங்கள் இயக்கத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எம்ஜிஆர் அவர்கள் நடித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை. அவர் தான் நடித்துக்கொண்டிருக்கும்பொழுதே அரசியலிலும் ஈடுபட்டார். ஆனால் தற்போதைய நடிகர்கள் சினிமா பயணம் முடிந்த பிறகு அரசியலுக்கு வருகிறார்கள். அதிலும் மாபெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு வெற்றிடத்திற்காக காத்திருந்து அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் போன்றவர்களின் செயல் நாகரிகம் அற்ற செயல். என தெரிவித்துள்ளார்.