அதிமுகவில் இருந்து நீக்கப்படப்போகும் சி.வி.சண்முகம்.. எஸ்.பி.வேலுமணி.?! வெடித்த மோதல்.?!



Internal Clash In AIADMK between eps and cvshanmugam teem 

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் சட்டமன்ற குழு பொறுப்புகள் குறித்து கூட்டத்தில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதாக தகவல்கள் பரவின. பின்னர் சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 38 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சட்டமன்ற குழுத் தலைவராக வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் நியமிக்க வேண்டும் என ஆதரவு கடிதம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அ.தி.மு.கவில் புதிய அணிச்சேர்க்கை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: அதிமுக தலைமையில் அதிர்ச்சி.... எஸ்.பி.வேலுமணி, சி. வி.சண்முகம் உட்பட6 MLA-க்கள் திடீர் மாயம்..? அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!

cv Shanmugam

நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்காக சேலம் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. “சி.வி. சண்முகம் கூறுவதை கேட்கத் தயார்” என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதிருப்தி அணியினர் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அவசரமாக கூட்டியுள்ளார். சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்களை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தின் முடிவே அ.தி.மு.கவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!