காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டுள்ளேன்; ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டுள்ளேன்; ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு


i-am-marriage-congress-party

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் அவரது திருமண திட்டம் குறித்து கேட்ட போது அவர் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

rahul gandhi

இரண்டு நாள் பயணமாக ஐதராபாத் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  நரேந்திர மோடி 2019 ல் பிரதமர் ஆக மாட்டார் என்று பேட்டி அளித்துள்ளார்.

அவர் உள்ளூர் மக்களை சந்திக்கவும், கட்சி தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் இன்று உரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

I will be in Bidar, Karnataka to address a public meeting at the Nehru Stadium today, at noon. Later this afternoon and all of tomorrow, I will be in Hyderabad to meet citizens, Congress party workers and leaders.

— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2018

மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க., வரும் தேர்தலில் 230 மக்களவை இடங்களைப் பெறாது, அதனால் எப்படி மோடி பிரதமர் பதவிக்கு வர முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி. யார் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்டபோது காங்கிரஸ் தலைவர் என நேரடியாக பதிலளித்தார். 

2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இதர பிஜேபி அல்லாத கட்சிகளுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும்.நாங்கள் அதை செய்வோம் என்று அவர் கூறினார்.

 தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என நம்புகிறோம் என கூறினார். ஆந்திராவில் கட்சியின் எதிர்காலத்தை பற்றி கேட்டபோது, 2014 தேர்தலுக்கு பிறகு, ராகுல் காந்தி தனது கட்சியை படிப்படியாக மேம்படுத்துவதாக கூறினார்.