ஸ்டாலினின் சவாலை ஏற்ற எச்.ராஜா; களத்தில் சந்திப்போம் என எச்.ராஜா பதில்

ஸ்டாலினின் சவாலை ஏற்ற எச்.ராஜா; களத்தில் சந்திப்போம் என எச்.ராஜா பதில்


h.raja replies for dmk leaders speech

திமுக தலைவர் பதவி ஏற்றவுடன் ஏற்புரை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார். மேலும் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேசினார்.

அவர் கூறுகையில் மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதசாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்ப்பது எனது கனவு. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதுகெலும்பு இல்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வேண்டும் என்றார் ஸ்டாலின்.

h.raja

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.