#அதிர்ச்சி : யாருக்கு வேணாலும் வாய்ப்பு வழங்க தாயார்! அதிமுக- திமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் எனக் கூறிய ஆளுநர்..!!!



governor-statement-on-tamilnadu-government-formation

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் நேற்று மற்றும் இன்று தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடத்திய நிலையில், பெரும்பான்மை நிரூபிக்காமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் ஆதரவுடன் தற்போது 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆட்சிக்கு தேவையான 118 உறுப்பினர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: BREAKING : இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.! இப்போ ஓகே சொல்லனா அடுத்த கட்டமாக அதிரடி முடிவு தான்... ஒரு முடிவோடு கிளம்பிய விஜய்!!!

ஆளுநரை மீண்டும் சந்தித்த விஜய்

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை விஜய் நேரில் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்கினார். ஆனால், முழுமையான பெரும்பான்மை ஆதாரம் தேவைப்படுவதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று மீண்டும் விஜய் ஆளுநரை சந்தித்தார். சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்கள் இல்லை என்பதால் தற்போது ஆட்சி அமைக்க அழைக்க முடியவில்லை” என்று கூறப்பட்டது.

‘குதிரை பேரம்’ ஏற்படலாம் என ஆளுநர் கருத்து

இதற்கிடையே, ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் அர்லேகர், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே பதவியேற்பு நடத்துவது சரியான நடைமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

“முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தால் குதிரை பேரம் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் விஜய்யை அழைக்கவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

திமுக - அதிமுக கூட்டணிக்கும் வாய்ப்பு?

மேலும், “திமுக மற்றும் அதிமுக இணைந்து வந்து பெரும்பான்மையை நிரூபித்தாலும், அவர்களுக்கு பதவியேற்பு நடத்த தயாராக இருக்கிறோம். யார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம்,” என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள கூட்டணி பேச்சுவார்த்தைகளும், எம்.எல்.ஏ ஆதரவு கணக்குகளும் புதிய அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணித்து வருகின்றன.

 

இதையும் படிங்க: ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!