பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அன்று 'கோ பேக் மோடி'.. இன்று 'வெல்கம் மோடி'.. திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி!
எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று ஆளுங்கட்சியானவுடன் வெல்கம் மோடி என்று அழைக்கிறார்கள் என திமுகவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நாங்கள் பாஜகவை பார்த்து பயப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உளறுகிறார்.
ஆனால் உண்மையில் திமுக தான் பாஜகவை பார்த்து பயந்து நடுங்கும் கட்சி என்பது மக்களுக்கு தெரியும். இந்தியாவில் எந்த கட்சிக்கும் பயப்படாத கட்சி அதிமுக. அப்பாவும், மகனும் சேர்ந்து பிரதமர் மோடியை ஏழு முறை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இதே திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் என்று கூறினார்கள். ஆனால் இன்று ஆளுங்கட்சி ஆனவுடன் வெல்கம் மோடி என்று கூறுகிறார்கள்.
இப்படிதான் நீங்கள் மோடியை எதிர்க்கிறீர்களா? நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்றாலும் கள்ள கூட்டணி என்று விமர்சனம் செய்கிறார்கள். ஸ்டாலினின் நடிப்பை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் மயங்கி விழுந்திருப்பார்.
சூதாட்டம் நிறுவனத்திடம் பணம் வாங்கிய கட்சி தான் திமுக. பத்து ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக உள்ளே இருக்கிறார். இல்லையென்றால் அவர் கோவையை இந்நேரம் அழிவு பாதைக்கு கொண்டு சென்றிருப்பார் என திமுகவை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.