இது நான்கரை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட மாணவர்களின் குரல்! Where Is Our Laptop.? பொம்மை முதல்வரே..... தேர்தல் நேரத்தில் இதுவும் நாடகமா! அடித்து பேசி ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!
தமிழ்நாட்டில் மாணவர் நலத் திட்டங்கள் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ள நிலையில், லேப்டாப் வழங்கல் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
லேப்டாப் திட்டம் குறித்து குற்றச்சாட்டு
வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, இது Election Drama என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஏழை எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.
இதையும் படிங்க: விஜய் மட்டும் இதை செய்தால் திமுகவின் தோல்வி உறுதி!! எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்..
அம்மா அரசின் திட்டத்திற்கு பாராட்டு
அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதையை மாற்றிய திட்டமாக விலையில்லா மடிக்கணினி திட்டம் இருந்ததாகவும், தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் அது தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த மடிக்கணினிகள் பலரின் Career Guide ஆகவும், Life Shaping Device ஆகவும் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் மாணவர்களின் ஏக்கம்
ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக தற்போதைய Stalin Model Government அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை என்றும், இதனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இன்றைய AI காலத்திற்கு ஏற்ற தரமான சாதனங்களை வழங்காமல், கல்வி ஆண்டின் நடுவில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மாணவர்களின் கேள்வி
பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்ற முயல்கிறதா திமுக அரசு என கேள்வி எழுப்பிய அவர், கல்வி உயர்விற்காக தொடர்ந்து செயல்பட்ட அதிமுகவுக்கும், தேர்தல் கண்காணிப்புக்காக நாடகம் ஆடும் அரசுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். WhereIsOurLaptop என்பது அரசியல் கேள்வி அல்ல; நான்கரை ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் குரல் என அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களின் எதிர்காலம் அரசியல் கணக்குகளுக்கு பலியாகக் கூடாது என்பதே இந்த விவாதத்தின் மையம். லேப்டாப் வழங்கல் உண்மையான கல்வி மேம்பாட்டுக்கான முயற்சியா, அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கையா என்பதற்கு, அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படுமா என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் இதை தடுக்க முடியாது! 2026 தேர்தலில் மே 5 ஆம் தேதி இது நடப்பது உறுதி.., அதிமுக EX MLA ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி.!