இது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை: மகனுக்காக போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்..!



edappadi-palaniswami-has-no-authority-to-remove-anyone

அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 18 பேர் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 18 பேர் நீக்கப்படுவதாகவும், கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

O Panneerselvam

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வின் ஒரே ஒரு எம்.பியான ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அ.தி.மு.க சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு செல்லாது. யாரையும் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கு இல்லை. உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான் எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது. எதேச்சதிகாரம் செலுத்தும் எடப்பாடி பழனிசாமியின் போக்கு எந்த வகையிலும் நியாயம் இல்லை.

அ.தி.மு.க-விலிருந்து ரவீந்தரநாத் எம்.பியை நீக்கியது சார்வாதிகாரமான போக்கு. இது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. யாரையும் நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. இது சட்டப்படி செல்லாது  என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.