பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமோக வெற்றி.! வேலூர் கோட்டையை கைப்பற்றியது யார் தெரியுமா?

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமோக வெற்றி.! வேலூர் கோட்டையை கைப்பற்றியது யார் தெரியுமா?



dmk won in vellore election

பணப்பட்டுவாடா புகாரை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல், கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த் உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

vellore

மேலும் தபால் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் முதல் 15 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் முன்னிலை வகித்தார். ஆனால் தொடர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை விவரங்கள் மாறிக் கொண்டே இருந்த நிலையில் இறுதி சுற்றின் முடிவில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 485340 வாக்குகள் பெற்று திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

 இதனால் திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு 4.30 மணிக்கு வெளியிடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.