ஆட்சியை காப்பாற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.

ஆட்சியை காப்பாற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.



dmk stalin marriage function nagai

திமுக தலைவர் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ஆட்சியை காப்பாற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.   

ஆட்சியில் இல்லாத நேரத்திலும், மக்கள் மீது அக்கறை கொள்ளும் கட்சியாக திமுக உள்ளது. மக்களுக்கு தொண்டாற்றிட அண்ணா இந்த கட்சியை உருவாக்கினார். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது, ஆளுங்கட்சியாக இருப்பது அதிமுக-வா? அல்லது திமுக-வா? என்று சந்தேகம் எழுகிறது.

tamilspark

சட்டமன்ற எண்ணிக்கையை காப்பாற்றிக்கொள்ள, அதிமுக உறுப்பினர்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த ஆட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். டெங்கு ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிப்பது போல, தமிழக அமைச்சர்களை ஒழித்தால் தான் தமிழகத்துக்கு முன்னேற்றத்தை பெற முடியும். 

கருத்து கணிப்புகளை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. கழக தொண்டர்களின் கருத்துக்கணிப்புகள் தான் திமுக-வுக்கு முக்கியம். அதை தான் கருணாநிதி செய்வார். திமுக தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போது, அதற்கு அதிமுக அரசு அனுமதிக்கவில்லை. குட்கா விவகாரத்தை எழுப்பியதற்காக திமுக-வினர் வெளியேற்றப்பட்டனர். பிறகு அதன் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக குட்கா விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. 

தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ தனது கையில் எடுத்துள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிக்கியிருக்கின்றனர். குற்றச்சாட்டுக்கள் நிறைந்த இந்த ஆட்சியை திமுக நிச்சயம் வெளியேற்றும் என்று ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பேசினார்.