"திமுகவுக்கு பிஸ்கட் போடும் பழக்கம் இல்லை" - சீமானை கடுமையாக விமர்சித்த திமுக எம்பி..!! 

"திமுகவுக்கு பிஸ்கட் போடும் பழக்கம் இல்லை" - சீமானை கடுமையாக விமர்சித்த திமுக எம்பி..!! 



dmk-mp-criticized-about-seemaan

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துகேட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூட்டம் நடத்தியது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடற்கரையில் பேனா சின்னம் வையுங்கள். அதை மீறி கடலுக்குள் பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்" என்று காரசாரமாக தெரிவித்தார். 

இக்கருத்துக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், சமூக வலைத்தளத்திலும் இவருக்கு எதிராக பலர் கருத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் சீமானின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்பி அப்துல்லா, தலைவர் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்கிறாரே சீமான்?. 

"மன்னிக்கனும். திமுகவுக்கு பிஸ்கட் போடும் பழக்கம் இல்லை. எனவே அவர் கத்துவதை எங்களால் தடுக்க முடியாது" என்று சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது இக்கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.