திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ திமுக அதிரடி திட்டம்!

திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ திமுக அதிரடி திட்டம்!


dmk

கருணாநிதியின் சிலையை டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ திமுக திட்டம்!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது சிலையை, வரும் 15ஆம் தேதி நிறுவ திட்டமிடப்பட்டது. 

dmk

ஆனால், ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர், விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்பட்டதால், சிலை திறப்பு விழா, அடுத்தமாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

dmk

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நிறுவ திமுக திட்டமிட்டுள்ளது. 

dmk
மேலும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும், அப்போது, தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதின் சிலை பத்தின உங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்வோம்.