அரசியல் தமிழகம் சினிமா

தேர்தலுக்காக தலைவர்கள் செய்யும் பிரச்சாரம்! நடிகர் சேரனின் கைதட்ட வைக்கும் கருத்து!

Summary:

cheran talk about Election


தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தலைவர்களின் பிரச்சாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சேரன்  கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், ”எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை... பிரச்னைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.. ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்காளனாய் எனக்கு தோன்றியது..' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement