தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"மாம்பழத்திற்காக இறங்கி வந்த தாமரை" இன்று வெளியாகுமா பாமக - பாஜக கூட்டணி அறிவிப்பு.?
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் தங்களது தொகுதி பங்கேட்டை சமூகமாக முடித்துக் கொண்டது. மறுபுறம் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் திரும்பிய அவர் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் பாமகவிற்கு 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.