திமுகவுக்கு என் மேல் பயம்.. பதிலடி கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை!

திமுகவுக்கு என் மேல் பயம்.. பதிலடி கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை!



BJP annamalai reply to DMK

18 வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் தங்களது எதிர்க்கட்சிகளை ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றனர்.

annamalai

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று விமர்சித்த திமுகவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி கோவையில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், என் மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் எனவும், கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்றி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் காங்கிரஸ் மற்றும் திமுகவினருக்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் கூறியுள்ளார்.

annamalai

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் போலி முகத்திரையை கிழித்து வருவதால் தான் என் மீது அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னை ஆட்டுக்குட்டி என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார்.