சட்டப்பேரவையில் ஒலித்த இயக்குனர் அட்லியின் பெயர்.. அமைச்சர் சொன்ன அல்டிமேட் பதில்.. தக்ஃலைப் ரிப்ளை.! 



Atlee’s Name Echoes in Tamil Nadu Assembly; Minister Rajmohan’s Sharp Reply Goes Viral

மக்கள் பணிக்காக முதல்வர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், முழுநேர அரசியவாதி திரைக்கலைஞரின் பெயரை சொல்லலாமா? என சூசகமாக அமைச்சர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தொடரும் பதிலடி:

Director Atlee: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், ஆளும்கட்சி Vs எதிர்க்கட்சி விவாதம் அனல்பறக்க நடந்து வருகிறது. மேகதாது பிரச்சனை, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சூழல் என ஆளும் தவெக அரசுக்கு எதிராக திமுக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த கேள்விகளுக்கு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக அரசும் பதில் கொடுத்து வருகிறது. 

இதையும் படிங்க: விஜயின் ஆட்சிக்கு எதிர்ப்பு? மௌனம் களைத்த மு.க. ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?

TN politics

திமுக எம்.எல்.ஏ. பேச்சு:

இதனிடையே, சட்டப்பேரவை கூட்டத்தொடர் விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் & திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர், "சிறந்த திரைப்பட காட்சிகளை தனது காட்சிகளாக எடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லீ போல, திமுக தலைமையிலான கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கொண்டு இன்று தவெக அரசு ஆட்சி நடத்துகிறது" என அரசுக்கு எதிராக பேசி இருந்தார்.

TN politics

ராஜ்மோகன் பதிலடி:

இந்த விஷயத்துக்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் ராஜ்மோகன், "தமிழ்த்திரையுலகில் பணியாற்றி மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வந்துள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய், செவ்வனே அரசுப்பணிகளை மேற்கொள்கிறார். ஆனால், முழுநேர அரசியல்வாதியாக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர், அட்லீ குறித்து பேசி இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது. இயக்குனர் அட்லீக்கும் - சட்டப்பேரவைக்கு என்ன சம்பந்தம் உள்ளது?" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெகவுக்கு வாக்களித்துவிட்டு வருந்தும் வாக்காளர்கள் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆதங்கம்.!