வெளியனது அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

வெளியனது அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!


aiadmk alliance seat distribution

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அரசியல் காட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்ட துவங்கினர்.

இந்நிலையில், மிகவும் இழுபறியாக இருந்த அஇஅதிமுக கூட்டணியில் கடைசியாக தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் காட்சிகள் இணைந்துள்ளன. எனவே இறுதியாக அஇஅதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மற்றும் அகில இந்திய NR காங்கிரஸ் காட்சிகள் இணைந்துள்ளன.

ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் எதனை தொகுதிகள் என்ற பேச்சு வார்த்தை முடிவுற்ற நிலையில், தற்போது எந்தெந்த காட்சிகள் எந்ததெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரத்தை அஇஅதிமுக கட்சி வெளியிட்டுள்ளது.

AIADMK

இதில், அதிமுக: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை தெற்கு என மொத்தம் 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

பாமக: தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம்,கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள். பாஜக: கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி என 5 தொகுதிகள்.  

தேமுதிக: கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர் என நான்கு தொகுதிகள். தமாக: தஞ்சாவூர்; புதக: தென்காசி; புநீக: வேலூர்; NR காங்கிரஸ்: புதுச்சேரி