அரசியல் தமிழகம் Covid-19

திமுகவின் முக்கிய எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!

Summary:

again one DMK MP affected by corona


தமிழகம் முழுவதும் அதிகமாக கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாரபட்சம் இன்றி ஏழை மக்கள் முதல் பணக்காரர், சினிமா, அரசியல் பிரபலங்கள் என அனைத்து மக்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்நோய்க்கு சில பிரபலங்கள் பலியாகியும் உள்ளனர். 

கொரோனாவால் பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கொரோனா பாதித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எம்பி வசந்தகுமார் நேற்று இரவு காலமானார். இந்தநிலையில், அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறியுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement