ரூ.30 கோடி பேரம்... அதிமுக நிர்வாகி மன்னன் அதிரடி கைது..! அதிமுகவை அதிரவைக்கும் பின்னணி..!!!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகாரில், அதிமுக நிர்வாகி மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தஃபாவுக்கு இந்தத் தொகையை வழங்குவதாக ஆசை காட்டியதாக மன்னன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.30 கோடி பேரம் பேசியதாக புகார்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்யும் நோக்கில், தவெக எம்எல்ஏ முஸ்தஃபாவிடம் அதிமுக நிர்வாகி மன்னன் ரூ.30 கோடி பேரம் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. முஸ்தஃபாவின் உதவியாளர் கனி ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வெற்றி பெரும் தவெக..! MLA-க்கள் ராஜினாமா வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!
இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்குப்பதிவை மையமாக வைத்து இவ்வளவு பெரிய தொகை பேசப்பட்டதாகக் கூறப்பட்டது அரசியல் கட்சிகளிடையே கவனத்தை ஈர்த்தது.
விசாரணைக்குப் பிறகு மன்னன் கைது
புகாரைத் தொடர்ந்து மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விசாரணையின் அடிப்படையில் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரூ.30 கோடி பேரம் தொடர்பான குற்றச்சாட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, புகாரில் கூறப்பட்ட தகவல்களுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் தவெகவின் அரசியல் வியூகம்! திரிஷாவா... இல்ல ஜான் ஆரோக்கியசாமியா? அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட மாஸ்டர் பிளான்..!!!