அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மதுரை அருகே பரபரப்பு... பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அடிதடி.!! திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு.!!
மதுரை மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தை சேர்த்தவர் கணேசன். அதிமுக ஒன்றிய செயலாளரான இவர் அப்பகுதியில் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கணேசன் மற்றும் திமுக கவுன்சிலர் கௌதம் ராஜா ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

இது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. அப்போது இரு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் பேரூராட்சி மன்றத்தின் கண்ணாடி, கதவுகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. இவர்களது மோதலால் பேரூராட்சி மன்றமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு கட்சி நிர்வாகிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்.!! பிசியோதெரபிஸ்ட் கைது.!!