பேரணியில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியினர் மீது கொடூர தாக்குதல்: 40 பேர் படுகாயம்..!

பேரணியில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியினர் மீது கொடூர தாக்குதல்: 40 பேர் படுகாயம்..!


40 people were injured in a brutal attack on BJP members participating in the rally

திரிபுரா மாநிலம், பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜனதா தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிபுரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தலும், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது.

இதனையொட்டி திரிபுராவில் உள்ள மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பிரச்சார பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அக்கட்சியின் தொண்டர்கள் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 40 பேரில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.