கலவரம் செஞ்சது அந்த கோஷ்டி; வழக்கு வாங்கியது இந்த கோஷ்டி: அதிரும் அரசியல் களம்..!

கலவரம் செஞ்சது அந்த கோஷ்டி; வழக்கு வாங்கியது இந்த கோஷ்டி: அதிரும் அரசியல் களம்..!


14 supporters of Edappadi Palaniswami arrested for their involvement in the attack on the ADMK head office have been sentenced to 15 days in court custody.

அ.தி.மு.க தலைமை அலுவலக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  நேற்று வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு  கூட்டத்தை புறக்கணித்த ஓ. பன்னீர்செல்வம்,  சென்னை ராயப்பேட்டையில்  அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றார். 

இதற்கிடையே, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.   இந்த மோதலில்  இரண்டு காவலர்கள் உட்பட 59 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளாது. 55 பேர் அரசு  மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்ற நிலையில்,  நான்கு பேர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த கலவரத்தில் 14 வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வருவாய் துறையினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள்  14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 14 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.