கொத்து கொத்தாக திடீரென மஞ்சள் நிறத்திற்கு மாறிய தவளைகள்..! வைரல் வீடியோ..! என்ன காரணம் தெரியுமா.?

கொத்து கொத்தாக திடீரென மஞ்சள் நிறத்திற்கு மாறிய தவளைகள்..! வைரல் வீடியோ..! என்ன காரணம் தெரியுமா.?


yellow-frogs-video-goes-viral

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மஞ்சள் நிறத்திலான ஆண் தவளைகள் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் அவ்வப்போது இதுபோன்ற மிகவும் சுவாரசியமான வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மஞ்சள் நிற தவளைகள் கூட்டம் கூட்டமாக குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தாது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Mysterious

சுமார் 31 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் குளத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே மஞ்சள் நிறத்தில் தவளைகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. பொதுவாக மஞ்சள் நிறத்தில் தவளைகளை பார்ப்பது கடினம், மழைக்காலத்தில் தனது இணையை கவர்வதற்காக அவை மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாக பிரவீன் கஷ்வான் அந்த பதிவில் கூறியுள்ளார்.

பெரும்பாலும் ஆண் தவளைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதில்லை. இனப்பெருக்க காலத்தில் தங்களது பெண் இணையை கவர்வதற்காக ஆண் தவளைகள் இதுபோன்று இயற்கையாகவே மாற்றி கொள்கின்றன.

ஆனால் அங்கிருக்கும் அனைத்து ஆண் தவளைகளும் தங்கள் இணையை பெறுவார்களா என்பதுதான் போட்டி எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.