43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
"அதிர்ச்சியை கிளப்பும் 6 பக்க கடிதம்..." கழுத்தறுக்கப்பட்டு மகன் கொலை.!! பகீர் பின்னணி.!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலைக்கு முன்பு அந்தப் பெண் எழுதிய 6 பக்க கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை
ஹைதராபாத் நகரின் கஜுலராமரம் லே-அவுட் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வர ரெட்டி. இவரது மனைவி தேஜா ரெட்டி. இந்த தம்பதியினருக்கு 11 வயதில் ஹர்ஷித் ரெட்டி(11) மற்றும் 9 வயதில் ஆஷிஷ் ரெட்டி என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தேஜா ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவரது வீட்டில் சென்று சோதனை நடத்திய போது அவரது 2 மகன்களும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறை விசாரணை
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்ஷித் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆஷிஷ் ரெட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். மேலும் தேஜா ரெட்டியின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதிய 6 பக்க கடிதம் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடங்கியிருக்கிறது.
இதையும் படிங்க: உபியில் கொடூரம்... "கோவிலில் இரத்தக்கறை..." 12 வயது தலித் சிறுமி பலாத்காரம்.!! போலீஸ் விசாரணை.!!
கணவருடன் கருத்து வேறுபாடு
அவர் எழுதிய கடிதத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மன உளைச்சல், குழந்தைகளின் உடல் நலன் காரணமாக இந்த கொடூர முடிவை எடுக்கப் போவதாக எழுதியிருக்கிறார். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேஜா ரெட்டி தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு அவரும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "தனிமையில் பல நாள் உறவு..." கைவிட்ட உயிர் காதலன்.!! நர்சுக்கு நேர்ந்த சோக முடிவு.!!