அந்த உடையை அணிய மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு!

தன்னுடைய மனைவி சேலை அணிய மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலை அணிவது நமது பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான உடை. ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் சேலை அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சேலையைவிட மிக எளிதாகவும், உடுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் மாடல் உடைகளையே பெண்கள் அணிய விரும்புகின்றனர்.
திருமணமான பின் ஒவ்வொரு கணவனுக்கும் தன்னுடைய மனைவியை ஒருசிலர் உடைகளில் பார்த்து ரசிப்பதற்கு விருப்பம் இருக்கும். அப்படி ஒரு விருப்பம்தான் புனேவைச் சேர்ந்த அந்த கணவருக்கும் இருந்துள்ளது. ஆனால் அவரது மனைவி எப்போதும் வீட்டில் மாடர்ன் டிரஸ் மட்டுமே அணிந்துள்ளார்.
இதனால் வெறுப்படைந்த அந்த கணவர் தனது மனைவியை புடவை மட்டும் தான் அணிய வேண்டும், மாடர்ன் டிரஸ் எல்லாம் போடக் கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் வெறுப்படைந்த அந்த பெண் கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் தனது குழந்தையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். நீண்ட நாள் கழித்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்த அந்த கணவருக்கு பாசம் பொங்கி வழிந்தது. இதனால் மனம் திருந்திய அவர் தனது விவாகரத்து மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ துவங்கியுள்ளார்.