தமிழர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா..?!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா..?!



whats-behind-the-pongal-festival-of-tamil-people

பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியை தருவதுடன் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும், அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிறது.

எவ்வளவோ தலைமுறைகளைத் தாண்டியும், நாம் தமிழர் என்ற பெருமிதத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரே பண்டிகை, தமிழர் திருநாளாம் பொங்கல் மட்டுமே! குடும்ப உறவுகளோடு இணைந்து அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விழாக்களில் இது மிகவும் முக்கியமானதாகும். மேலும், இந்த மாடர்ன் தலைமுறையில் எவ்வளவோ கலாச்சார மாற்றங்களை நாம் கடந்து வந்தாலும், பழைய முறைப்படி பாரம்பரியத்தோடும், கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து நம்மை கொண்டாடத் தூண்டுகிறது. 

Tamilzhan

 போகி
பழையன கழிதலும், புதியன புகுதலும், பயனற்ற ஒழுக்கங்களை விட்டெறிந்து நல்ல எண்ணங்களை வளர்க்கும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் 'போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி 'போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் என்பதாகும்.

 தைப் பொங்கல்
உலகுக்கெல்லாம் உணவளித்தவன் உழவன். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், அவனைப் பெருமிதப்படுத்தும் வகையிலும், கொண்டாடப்படும் விழா தைப்பொங்கல் விழாவாகும். உறவுகளோடு இணைந்து, உழவர் பெருமக்கள் அந்த வருடம் அறுவடை செய்த நெல்லைக் கொண்டு பொங்கல் சமைத்து, நல்ல மகசூல் கொடுத்த இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி கூறும் விதமாக இவ்விழாவை கொண்டாடுவார்கள்.

Tamilzhan

 மாட்டுப் பொங்கல்
உழவனுக்கு உறுதுணையாய் இருந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
மாடுகளுக்கு வர்ணம் பூசி அழகூட்டப்படுகிறது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' இந்த நாளில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 காணும் பொங்கல்
'கன்னிப் பொங்கல்' என்று அழைக்கப்படும் காணும் பொங்கல் அன்று, உறவினர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வார்கள். சிறுவர்கள், பெரியவர்களை சந்தித்து ஆசி பெறுவதும் உண்டு.

தமிழர் திருநாளாம் இந்த தைத் திருநாளில், இன்பங்கள் பொங்கி அனைவரிடமும் மகிழ்ச்சி பெருகட்டும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!