பிறந்தநாளன்று தனது காதலியை காவலர் சுட்டுக் கொன்றது ஏன்? வெளியான திடுக்கிடும் தகவல்..!



wh-kathick-vel-killed-saraswathi

விழுப்புரம் அருகே அன்னியூரில் தனது காதலியை பிறந்தநாளன்று சந்திக்கச் சென்ற காவலர் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான செஞ்சியில் சரஸ்வதி என்ற கல்லூரி மனைவியை காதலித்து வந்துள்ளார். சரஸ்வதி மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

சரஸ்வதியின் பிறந்த நாளான நேற்று தனது காதலியை சந்திக்க கார்திக்வேல் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவர்கள் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் நேற்று காலை சந்தித்துள்ளனர். 

அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கார்த்திக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரஸ்வதியின் தலையில் அவரின் பெற்றோர்கள் கண்முன்னே சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் மேலும் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

karthick vel and saraswathi

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணி என்ன.. கார்திக்வேல் சரஸ்வதியை ஏன் சுட்டுக்கொன்றார் என்ற காரணத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச் சேர்ந்த சரஸ்வதியுடன் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர்.

நாளடைவில் மருத்துவ மாணவியான சரஸ்வதி, காதலன் கார்த்தியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கார்த்தி சரஸ்வதி பயிலும் கல்லூரியில் அவரைப் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சரஸ்வதி தன்னுடன் படிக்கும் மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவருடன் நெருங்கி பழகுவதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

karthick vel and saraswathi

இதனால் கோபத்தில் இருந்த கார்த்தி இதனைப்பற்றி சரஸ்வதியிடம் அவரது பிறந்த நாள் இன்று விசாரித்துள்ளார். இதற்கு சரஸ்வதி நேருக்கு மாறாக பதிலளிக்கவே ஆத்திரமடைந்த கார்த்தி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.