43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
"ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!
கேரள மாநிலத்தில் தனது கணவர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளையும் தீ வைத்து எரித்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாய் மாப்பிள்ளையுடன் திருமணம்
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் தாரா கிருஷ்ணன். 36 வயதான இவருக்கு கிரிஷ் குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அனாமிகா(6) மற்றும் ஆத்மிகா(1) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். க்ரிஷ்குமார் துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தாரா மற்றும் கிரிஷ் குமார் குடும்பத்தினரிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

தந்தை வீட்டில் தற்கொலை
இதனைத் தொடர்ந்து தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் தாரா. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அவரது தந்தை டீ குடிக்க சென்றிருக்கிறார். அப்போது தனிமையில் இருந்த தாரா தனது 2 குழந்தைகளையும் தீ வைத்து எரித்து விட்டு தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்திருக்கிறார். அப்போது வலியால் அலறி துடித்த இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் ரைடு.. மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி.! பதறவைக்கும் காட்சிகள்.!
காவல்துறை விசாரணை
எனினும் பலத்த தீக்காயமடைந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தற்கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தாரா தனது 2 குழந்தைகளையும் முதலில் தீ வைத்து எரித்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அந்தோ பரிதாபம்.. போதை நபரின் ஆணுறுப்பில் நட்டு சொருகிய ஆசாமிகள்.!