வீட்டில் இருக்கும் கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது டிவி ரிமோட்.! வெளியான ஷாக் தகவல்.!

வீட்டில் இருக்கும் கழிப்பறையைவிட 20 மடங்கு அசுத்தமானது டிவி ரிமோட்.! வெளியான ஷாக் தகவல்.!


TV remotes are more dirty than toilet

வீட்டில் இருக்கும் பொருட்களில் மிகவும் அசுத்தம் நிறைந்த பொருள் எது என்று சோதனை நடத்தியதில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி ரிமோட் தான் அதிகம் அசுத்தம் நிறைந்தது என்ற ஷாக் தகவலை கூறியுள்ளனர் ஆய்வு நடத்தியவர்கள்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவர் கைகளிலும் மாறி மாறி வளம் வருகிறது இந்த டிவி ரிமோட். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையைவிட நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த டிவி ரிமோட்டில் 20 மடங்கு அதிகமாக கிருமிகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறதாம்.

TV Remote

இதுகுறித்த ஆய்வில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டி, படுக்கையறைத் தரைவிரிப்பு, டிவி ரிமோட், கழிப்பறை அமர்விடம் என பல பொருட்களில் இருக்கும் கிருமி, யீஸ்ட் மற்றும் பூஞ்சைகள் நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் டிவி ரிமோட்டில் மட்டும் கிருமிகள் அளவு 290 அலகுகளாக இருந்துள்ளது. இதனை கழிப்பறை அமர்விடத்தில் இருக்கும் கிருமிகளின் அளவு 12.4 அலகுகள் மட்டுமே என தெரியவந்துள்ளது.

எனவே, டிவி ரிமோட்டை அடிக்கடி தொடாமல் இருப்பது நல்லது. மேலும், டிவி ரிமோட்டை பயன்படுத்திவிட்டு கை கழுவுவது, ரிமோட்டைச் சுத்தமாகப் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.