கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
கார் வாங்கும் கனவை நிறைவேற்றும் டாப் 5 பட்ஜெட் கார்கள்! 3 முதல் 5 லட்சம் வரை!

பொதுவாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் கார் விற்கும் விலைக்கு நம்மால் எப்படி கார் வாங்க முடியும் என்று நினைப்பவர்கள் ஏராளம். கவலைய விடுங்க. உங்க கனவை நினைவாக்க மிக குறைந்த விலையில் உள்ள டாப் சிறந்த கார்கள் பற்றி பாக்கலாம் வாங்க.
1 . Ford Figo
பட்ஜெட் விலையில் மிக சிறந்த கார்களில் ஒன்றுதான் Ford Figo . நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் சிறந்த விலையில் கிடைக்கும் கார்களில் இதுவம் ஓன்று. அழகான தோற்றம், போதுமான வசதிகள் கொண்ட இந்த கார் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை கிடைக்கிறது.
2 .Tata Tiago
2015 ஆம் ஆண்டு டாடா நிர்வாணம் இந்த மாடலை அறிமுகம் செய்தது. அறிமுகமான அன்றில் இருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது Tata Tiago. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின்களில் கிடைக்கிறது Tata Tiago. மூன்று லட்சம் முதல் 6 லட்சம் வரை இதன் விலை நிர்ணைக்கப்பட்டுள்ளது.
3 . Maruti Suzuki Celerio
மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Maruti Suzuki Celerio மடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின்களில் கிடைக்கிறது. மேலும் நல்ல தோற்றம், ஈஸி மெயின்டனஸ் என வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த மாடல். நான்கு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை கிடைக்கிறது.
4 . Renault Kwid
தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற கார்களில் ஓன்று Renault Kwid. சிறந்த காருக்கான 2016 ஆம் ஆண்டு விருதினை வாங்கியது Renault Kwid . அதிக இட வசதி, சிறந்த தோற்றம் என வாடிக்கையாளர்களின் நம்பர் ஒன் விருப்பமாக உள்ளது Renault Kwid . இதன் விலை இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 . Hyundai Grand i10
அதிக மக்களால் வாங்க பட்ட கார்களில் ஓன்று இந்த Hyundai Grand i10 . என்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன் வசதிகள் கொண்டது, பார்க்கிங் சென்சார் கொண்டது, நல்ல தோற்றம், சிறந்த இடவசதி கொண்ட கார்களில் ஓன்று Hyundai Grand i10 . இதன் விலை நான்கு லட்சம் முதல் 8 லட்சம் வரை கிடைக்கிறது.