அவசரமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு குழம்பு தயார் செய்ய வேண்டுமா.? 10 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி!!

அவசரமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு குழம்பு தயார் செய்ய வேண்டுமா.? 10 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி!!



Tomato kulambu recipe in Tamil

அவசரமயமான இந்த உலகில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்த நேரத்தில் அவசரமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு குழம்பு தயார் செய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்படியானவர்களுக்கு வேறு 10 நிமிடத்தில் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம்- 15
பூண்டு - 10பல்
பொடியாக துருவிய தேங்காய் - சிறிதளவு,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் 
தனியாத்தூள் - 2 டீஸ்பூன் 
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிப்புக்கு,
பெரிய வெங்காயம் - 1 ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

Tomato kulambu

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், சீரகத்தூள் தனியாத்தூள், மிளகாய்த்தூள் கடைசியாக தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அதனை நன்றாக ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளி குழம்பு தயார்.