மொரீஷியஸில் இன்பசுற்றுலா சென்றுள்ள இளையராஜா - யுவன் சங்கர் ராஜா; பாசமழையில் நனையும் தந்தை-மகன்.!Ilayaraja and Yuvan Shankar Raja at Mauritius

 

தமிழ் திரையுலகில் ஆயிரம் திரைப்படங்களை கடந்து இசையமைத்து, பல படங்களை வெற்றிபெறச்செய்த பெருமை இசைஞானி என வருணிக்கப்படும் இளையராஜாவுக்கு உண்டு. 

தமிழக மக்களின் மனதை அறிந்து, அவர்களின் மனதின் வழிக்கேற்ப இசையமைத்து பல மனங்களின் ரணங்களை ஆற்றிய பெருமை அவருக்கு உண்டு. 

அதே வழியில், இன்றைய இளம் தலைமுறையின் நெஞ்சில் குடிகொண்டு எந்த ஒரு சூழலுக்கும் உகந்த இசையை தந்த இளையராஜாவின் மகன் யுவனும் காலத்தால் அழியாத இசையை கொடுத்துவிட்டனர்.

இந்நிலையில், தந்தையும் - மகனும் தற்போது மொரிசியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மாறிமாறி உணவை பகிர்ந்து ஒட்டிவிட்டு உண்ணும் புகைப்படத்தை தங்களின் சமூக பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.