
Today's gold rate in chennai
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் கடந்த மாதம் வரை தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 272 ரூபாய் குறைத்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் 4,877 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 4,911 ஆக இருந்த நிலையில் இன்று 34 ரூபாய் குறைந்து 4,877 ஆக விற்பனையாகிறது. அதேபோல் நேற்று 39,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 272 ரூபாய் குறைந்து 39,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆபரண தங்கத்தை போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,157லிருந்து இன்று ரூ.5,152 ஆகக் குறைந்துள்ளது.அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 41,256 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 40 ரூபாய் குறைந்து 41,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement