செம ஹேப்பியில் இல்லத்தரசிகள்... தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

செம ஹேப்பியில் இல்லத்தரசிகள்... தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


Today's gold rate in Chennai

நாடு முழுவதும் கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாக கோர தாண்டவம் எடுத்ததை அடுத்து தங்கத்தின் மீது மக்கள் அதிகம் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.  இருப்பினும் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5275 ரூபாய்க்கும் ஒரு பவுன் தங்கம் 42,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

gold rate

இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,245 ரூபாய்க்கும் ஒரு பவுன் தங்கம் 41,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 71.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.