பெற்றோரை பிரிந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி! 6 மாதம் கூட சேர்ந்து வாழ முடியாத சோக சம்பவம்

பெற்றோரை பிரிந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி! 6 மாதம் கூட சேர்ந்து வாழ முடியாத சோக சம்பவம்


tirupur-lovers-suicide-6-months-after-marriage

திருப்பூர் வெள்ளகோவில் அருகே 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சூரபட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் நந்தகுமார். இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் தொலைபேசி நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதனின் மகள் சத்யபிரியா என்பவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

tirupur lovers suicide
 
இதனைத்தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்தனர். 

 இந்நிலையில் நேற்று முன்தினம் நந்தகுமார் வேலைக்கு வராததால் டீக்கடை உரிமையாளர் அவரைத் தேடி நந்தகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை நெடுநேரம் தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த டீக்கடை உரிமையாளர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அப்போது நந்தகுமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்ட டீக்கடை உரிமையாளர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்னர் வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சத்யபிரியா தரையில் படுத்தபடி இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ மருந்து அடங்கிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது.

tirupur lovers suicide

மேலும் அந்த காதல் ஜோடிகள் எழுதியிருந்த உருக்கமான கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் அவர்கள், "அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் நாங்கள் இந்த உலகத்தை விட்டு பிரியப் போகிறோம். எங்களை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எங்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் மட்டுமே போதும்" என எழுதி உள்ளனர்.

பின்னர் காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.