கார்த்திகை தீபநாளை தவிர்த்து மற்ற நாட்களில் வீடுகளில் தீபம் ஏற்றலாமா.?

கார்த்திகை தீபநாளை தவிர்த்து மற்ற நாட்களில் வீடுகளில் தீபம் ஏற்றலாமா.?



Tirukkarthigai deebam tiruvannamalai deebam

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும் என்பது ஐதிகமாக இருக்கிறது.

இந்நிலையில்தான், நவம்பர் மாதம் 26 ஆம் தேதியான நாளை தமிழ்நாடு முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவிருக்கிறது. ஆகவே இந்த நன்னாளில் மாலை நேரத்தில் எல்லோரும் அவரவர் வீட்டில் எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்க முடியுமோ? அவ்வளவு விளக்குகளையும் ஏற்றி தென்னாடுடைய சிவபெருமானை முழு மனதோடு வணங்கி வழிபாடு செய்யுங்கள்.

Karthigai Deebam

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்போது அதே சமயத்தில் உங்கள் வீட்டிலும் மறக்காமல் விளக்கேற்றுங்கள். ஒவ்வொரு விளக்கிலும் சக்தி கொடியேறுவதாக ஐதீகம். அந்த சக்தி சிவ சக்தியாக இருந்து, உங்கள் ஒட்டுமொத்த வீட்டையும் வலுவாக்கி காத்தருளும் என்கிறார்கள் ஆச்சாரிய பெருமக்கள்.

இந்த திருக்கார்த்திகை திருநாளின் போது விளக்குகளை ஏற்றுவதற்கு முன்பாக நன்றாக கழுவ வேண்டும். கீறல் விழுந்த விளக்குகளையோ, உடைந்து போன விளக்குகளையோ பயன்படுத்தக் கூடாது. அந்த விளக்கை ஏற்றுவதற்கு முன்னர் அதற்கு குங்குமம், சந்தனம் ஆகியவற்றை இடவேண்டும். பின்பு அதில் வைக்கும் திரிகள் கெட்டியானதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும். சுடரிலிருந்து சூடம், ஊதுபத்தி ஆகியவற்றை கொளுத்தக் கூடாது.

Karthigai Deebam

விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றக்கூடாது. மாறாக ஒரு துணை விளக்கு ஏற்றி அதன் மூலமாகவே ஏற்ற வேண்டும். புதிய மஞ்சள் திரிப்போட்டு விளக்கை ஏற்றினால், செய்வினை, தீய சக்திகள் உள்ளிட்ட தொந்தரவுகள் உங்களை நெருங்காது. அதன் பிறகு தீபத்தை அணைக்கும்போது பூவின் இதழை  பயன்படுத்தி அணைக்கவும்.

கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்லாமல், அனைத்து நாட்களிலும் வீட்டில் விளக்கேற்றினால், குலம் தழைத்து, ஐஸ்வரியம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து மீண்டு, விடலாம் என்று ஆச்சாரியர்கள் தெரிவிக்கிறார்கள்.