அலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பது எப்படி? அருமையான டிப்ஸ்!

அலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பது எப்படி? அருமையான டிப்ஸ்!



tips-to-handle-office-colleagues-in-tamil

இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் யார் காலை யார் வாருவார்கள் என்ற தெரியவில்லை. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் அலுவலகங்களில் தங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள். தாங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தங்களுடன் வேலைபார்க்கும் சக ஊழியர்களை சிக்கலில் மாட்டிவிடுவது பொதுவாக அணைத்து நிறுவனங்களிலும் நடக்கும் ஓன்று.

அலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியரகளை சமாளிக்க சில வழிகள். 

ராஜதந்திரம்
உங்கள் ‘பாஸ்’க்கு நீங்கள் நெருக்கமானவராக இருந்தால், சக ஊழியர்கள் சில நேரத்தில் வேண்டும் என்றே உங்களை புறக்கணிப்பார்கள். அப்போது உங்கள் டீமுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். நட்பாக பழகி அனைவருடனும் நல்ல உறவை பராமரிப்பதே ராஜதந்திரம். 

யோசித்து பேசுங்கள்
கிசுகிசுகளுக்கு நீங்கள் மையமாக மாறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதனால் கவனமாக பேசுவது அவசியம். ஏனென்றால் சக ஊழியர்கள் நீங்கள் பேசிய தை உங்களுக்கு எதிராக திருப்பிவிடுவார்கள்.

முறையான தகவல் தொடர்பு
முறையான வகையில் உங்களின் எல்லா தகவல் தொடர்பும் இமெயிலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறிப்பாக உங்கள் சீனியரை லூப்பில் வைப்பது தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க உதவும். 

How to handle co workers

பணிவு அவசியம்
சிறந்த போனஸ், அல்லது பாராட்டு கடிதம் உங்களுக்கு கிடைத்தால் அதை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பது சிறந்தது. பணிவாக இருப்பது நல்லது. 

கற்றுக்கொடுங்கள்.... 
சக ஊழியர்களுக்கு உதவி செய்வது நல்லது, ஆனால் கற்றுக்கொடுக்கிறேன் என்ற பேரில் அவர்களுக்கு பாடம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தற்பெருமை கூடாது
தொழில் ரீதியான முன்னேற்றத்துக்காக கடினமாக உழைப்பது முக்கியம், ஆனால் சக ஊழியர்களுக்கு மத்தியில் தற்பெருமை பேசுவது மிகவும் மோசமான ஐடியா. 

முக்கியமான விதி
தொழில் ரீதியான வாழ்வில் ஏற்றம் இறக்கம் மிகவும் சகஜமான விஷயம். ஆனால் ஆபீஸ் அரசியலில் முக்கியமான விதியே வேலையில் கவனமாக செயல்பட்டு, கார்ப்ரேட் ஏணியில் தொடர்ந்து முன்னேறுவதாகும்.