தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இந்த நேரத்தில அத செஞ்சா குழந்தை உருவாவது உறுதி!
பெருகிவரும் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மனிதனின் அன்றாட பழக்கவழங்களும் மாறிக்கொண்டே வருகிறது. இதனால் மனிதன் பலவிதமான வியாதிகளை எதிர்கொள்ளவேண்டியதாய் உள்ளது. அதில் ஒன்றுதான் குழந்தை இன்மை.
பலர் தங்களுக்கென ஒரு குழந்தையாவது பிறக்காத என்று எண்ணி ஏங்கித் தவிக்கின்றனர். இதுவே நாளடைவில் மனா அழுத்தம், கணவன் மனைவிக்குள் சண்டை, விவாகரத்து என பல காரணங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. கருத்தரிக்க முயலும் தம்பதியினர் முதலில் அதற்கான நாட்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆணும் பெண்ணும் உடலால் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இணைந்து விந்தணுவும், பெண்ணின் அண்ட அணுவும் ஒன்றிணைவதால் கருத்தரிப்பு ஏற்படுகிறது. உடலுறவை சரியான நேரத்தில் செய்தால் எளிமையாக, விரைவில் கருத்தரிக்க முடியும்.
கருத்தரிக்க முக்கியத் தேவையாக இருப்பது பெண்ணின் அண்டம் மற்றும் ஆணின் விந்தணுக்கள். பெண்ணின் கருவறையில் அண்டம் ஆண் விந்துவிற்காக காத்திருந்து, இறந்து போய் வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். பெண்ணின் மாதவிடாய் தொடங்கிய நாளை நாள்-1 அதாவது முதல் நாளாக கணக்கில் கொண்டு, மாதவிடாய் முடிந்த பின் சரியாக ஏழாம் நாள் – நாள்-7 முதல் நாள்-20 வரை தொடர்ந்து காதலுடன் சரியாக உடலுறவு கொண்டு வந்தால், நீங்கள் கருத்தரித்து தாய்-தந்தை ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
கருத்தரிக்க முடியாமல் இருக்க காரணங்கள்:
மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. எனவே, முடிந்த அளவிற்கு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த அல்லது குழந்தை பெற்று எடுக்கும் வரையாவது தவிர்த்து வைக்க முயலுங்கள்.
தம்பதியர் இருவரில் ஆணோ பெண்ணோ அதிகமான உடல் எடையை கொண்டிருந்தால், அதாவது உடல் கொண்டிருக்க வேண்டிய எடையை விட அதிகம் எடை கொண்டிருந்தால், அவர்கள் தாய்-தந்தை ஆவது சற்று கடினமான விஷயம். தகாத உணவு முறை தான் நீங்கள் அப்பா- அம்மா ஆவதை தடுக்கிறது.