இந்த பழக்கம் உங்களிடம் இருக்கா.? உஷார்.. "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்"ன்னு சும்மாவா சொன்னாங்க.?!



these habits may ruin your life totally

தீய பழக்கங்கள் என்பது நமக்கோ நம்மை சுற்றியுள்ளவர்களுக்கோ, எந்த ஒரு விதத்திலும் வெற்றியையோ மகிழ்ச்சியையோ நலனையோ தராத வாழ்க்கையில் பின்பற்றும் பழக்கங்களே ஆகும். இந்த பழக்கங்களால் நம்முடைய நடத்தை, குணநலன்  எதிர்மறையாக மாறுகிறது. நமக்குள் இருக்கும் திறமை, நற்பெயர் என அனைத்தையும் நாம் இழக்க நேரிடுகிறது. 

குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவும் பாதிக்கப்படுகிறது. தீய பழக்கங்களினால் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோள், இலக்கு போன்ற நல்ல காரியங்கள்  தடைப்பட்டுத் தோல்வி ஏற்படுகிறது. 

அதாவது, மது அருந்துதல், புகை பிடித்தல், காபிக்கு அடிமையாதல், ஆபாச படங்கள் பார்த்து அடிமையாதல், சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழத்தல், நகம் கடித்தல், ஆன்லைன் ஷாப்பிங், திருடுதல், பொய் கூறுதல், சாலை விதிகளை மதிக்காத குணம் என்பன தீயபழக்கங்களின் பட்டியலில் முன்னிலை பெறுகின்றன.

இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!

Habits

முக்கியமாக புகைப் பிடிப்பது, மது அருந்துவது, போன்ற பழக்கங்களால் உடல் நலம் கெடுவதுடன் அவர்களை சுற்றியுள்ளவர்களின் உடல் நலமும் கெடுகிறது. இந்த பழக்கங்களை பார்க்கும் குழந்தைகள், தவறான பழக்கங்களை தங்கள் வாழ்வில் உதாரணங்களாக  கற்றுக் கொள்கின்றன.

தீய பழக்கங்களில் இருந்து  வெளிவர முதலில் நம் மனதை மனதை மாற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். அதாவது, யோகா, உடற்பயிற்சி, புத்தகம் படித்தல், படம் வரைதல், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் மற்றும் செடி வளர்ப்பது போன்றவை ஆகும். இந்த பழக்கங்களை அட்டவணைப்படுத்தி எப்போதெல்லாம்  தீய எண்ணங்கள் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் மனதினை ஒருமுகப்படுத்தி  மேற்கண்ட காரியங்களில் ஈடுபட வேண்டும்.

வீட்டிலோ, சமூகத்திலோ மற்றும் பணியிடங்களிலோ நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நம் எதிர்கால சந்ததிக்கு தவறான உதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்! மருத்துவர்கள் எச்சரிக்கை..