தஞ்சை ஸ்பெஷல் தவளை அடையை செய்வது எப்படி தெரியுமா.?

தஞ்சை ஸ்பெஷல் தவளை அடையை செய்வது எப்படி தெரியுமா.?



thanjavur-special-thavalai-adai-recipe

தஞ்சாவூரின் ஸ்பெஷல் தவளை அடையை நாமும் மிகவும் எளிதாக செய்யலாம். தோசை, இட்லி போன்றவற்றுக்கு பதிலாக இதை நாம் செய்து சாப்பிடலாம்.

health tips

தேவையான பொருட்கள்

கால் கப் புழுங்கல் அரிசி

கால் கப் துவரம் பருப்பு

கால் கப் கடலைப்பருப்பு

கால் கப் உளுந்து

1 கப் பச்சரிசி

நறுக்கிய பச்சை மிளகாய்

நறுக்கிய இஞ்சி

அரை டீஸ்பூன் கடுகு

தேவையான அளவு உப்பு.

health tips

செய்முறை

கடலைப்பருப்பு, பச்சரிசி, உளுந்து, புழுங்கல் அரிசி இவற்றை நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்னர் அதிக அளவில் தண்ணீர் சேர்க்காமல், அரைத்துக் கொள்ள வேண்டும். 5 மணி நேரம் இதை புளிக்க வைத்து, எண்ணெயில் சீரகம், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்பு அதனை மாவில் கொட்டி, ஒரு குழியான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மாவை ஊற்ற வேண்டும். பின்பு தோசை போன்று இரு பக்கமும் வேகவைத்து எடுத்து சாப்பிடலாம்.