புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ரயில் பயணத்தில் மர்ம உறுப்பை தொட்ட நபரால் 16 வயது சிறுவனுக்கு அதிர்ச்சி.! X-தளத்தில் பதிவு.!
கடந்த மே 3-ம் தேதி டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு 16 வயது சிறுவன் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் அவர், "நான் ஒரு 16 வயது சிறுவன். தனியாக மெட்ரோவில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். இரவு 08:3௦-லிருந்து 09:30 மணிக்கு பயணித்தபோது எனது பின்புறத்தை யாரோ தொட்டது போல உணர்ந்தேன். அப்போது, பின்னால் இருந்த அந்த நபர் அடுத்ததாக எனது மர்ம உறுப்பை தொட்டார்.
எனவே, மிகவும் அதிர்ச்சி அடைந்து நான் அவரது கையை கிள்ளினேன். மீண்டும் அவர் என்னை தொட முயற்சித்தார். நான் எனது கையால் மேலும் கடுமையாக கிள்ளினேன். இதனால், அவருக்கு இரத்த கசிவை ஏற்பட்டது. இதனால், என் மீதான பாலியல் தாக்குதலை சற்று நேரம் நிறுத்தினார்.
பின்னர் மெட்ரோவில் இருந்து நான் இறங்கி வேகமாக நடக்கும் போது அவர் என்னை துரத்திக் கொண்டே வந்தார்." என்று தெரிவித்து இருந்தார். அவரது இந்த பதிவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து, அந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.
அதில் சிலரோ நான் உங்களை பெண் என்று நினைத்தேன். ஒரு ஆணுக்கு கூட பாலியல் தாக்குதல் நடக்கிறதா? சிறுவர்களை கூட விட்டு வைக்காமல் இந்த சமூகம் இருக்கிறதா? என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இது பற்றி டெல்லி காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.