ஐ.பி.எல் T20. டாப் 4 அணிகள் இதுதான்.. வெளியான லேட்டஸ்ட் புள்ளி பட்டியல் இதோ..IPL 2024 latest points table

ஐபில் T20 போட்டிகளின் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல் குறைத்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஐபில் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும்நிலையில், இதுவரை 53 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதல் இடம் பெற்றுள்ளது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளநிலையில், 8 போட்டிகளில் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் வலுவான அணியாக உள்ளது.

ipl 2024 points table

இதனை அடுத்து 7 வெற்றிகளுடன் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று பஞ்சாப் அணியுடன் வெற்றிபெற்றதை அடுத்து, சென்னை அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள சென்னை அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அதே 12 புள்ளிகளுடன் லக்னோ அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

ipl 2024 points table

6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஹைதராபாத் அணியும், அதே 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் டெல்லி அணி 6 வது இடத்திலும், தலா 8 புள்ளிகளுடன் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணி, 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளநிலையில், 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10 வது இடத்தில் உள்ளது.

ipl 2024 points table