லைப் ஸ்டைல் சமூகம்

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்; மாணவி மறுத்ததால் கொலை முயற்சி! ஆசிரியருக்கு விழுந்த தர்ம அடி

Summary:

teacher murder attempt his student

கர்நாடகா மாநிலத்தில் தன்னிடம் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை லவ் டார்ச்சர் செய்து, மாணவி மறுக்கவே அவரது கழுத்தை அறுத்து கொலை கொலை செய்ய முயற்சித்த ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடகா பங்காருபேட்டை என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் சங்கர். அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு சங்கர் அடிக்கடி லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதற்கு அந்த அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவே சங்கர் தொடர்ந்து அந்த மாணவியை தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.

இதனால் மிகவும் விரக்தி அடைந்த சங்கர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். போதையில் சென்ற சங்கர் அந்த மாணவியிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மீண்டும் மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த சங்கர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். மாணவியின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறவே வலியால் மாணவி துடித்து அலறினாள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் சங்கரை வளைத்துப் பிடித்த மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் ஆசிரியருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சங்கரை மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயம் ஏற்பட்ட சங்கரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement