சுவையும் சத்து நிறைந்த வடநாட்டு கேரட் பாயாசம்.!! சிம்பிளான ரெசிபி இதோ.!!



tasty-and-healthy-north-indian-carrot-payasam-simple-re

வைட்டமின் ஏ நிறைந்த கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதனை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான். வட இந்திய மக்கள் தங்கள் சுப நிகழ்ச்சிகளின் போது தயாரிக்கும் சுவையும் சத்தும் நிறைந்த கேரட் பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 1 கப் சேமியா, 1 கப் துருவிய கேரட், 1 கப் சர்க்கரை, 6 கப் பால், முந்திரி, திராட்சை தேவையான அளவு, 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள், நெய் 6 டீஸ்பூன்.

Healthy Foodசெய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.‌ பின் அதே பாத்திரத்தில் சேமியா போட்டு வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு  சிறிதளவு நெய் விட்டு கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும்.

Healthy Foodபின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து நாம் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சேமியா முக்கால் பகுதி வெந்ததும், அதில் வதக்கிய கேரட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும். இவை நன்கு வெந்ததும் கடைசியாக ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பாயாசம் தயார். பால் அதிகம் சேர்த்து செய்வதால் சுவை அமிர்தமா இருக்கும்.