அடடே... சுவையும் சத்தும் நிறைந்த பீட்ரூட் கோளா உருண்டை.!! சூப்பர் ரெசிபி.!!tasty-and-healthy-beetroot-kola-simple-recipe

பீட்ரூட் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு காய்கறி ஆகும். இதில் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். இதனால் அவர்களுக்கு பிடிக்கும் வகையில் கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டை வைத்து சுவையான பீட்ரூட் கோளா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் 1/4 கிலோ, பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 டம்ளர், பட்டை 2 துண்டு, லவங்கம் 5, மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவற்றுடன் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு சோம்பு ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளவும்.

Healthy Food

செய்முறை

முதலில் கடலைப் பருப்பை நன்றாக கழுவி அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது பீட்ரூட்டை நன்றாக துருவி எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். இதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லி இலை, துருவிய பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இவற்றுடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிய பின்னர் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு ஆற வைக்கவும். 

இதையும் படிங்க: லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையும் சத்தும் நிறைந்த தேங்காய் சாதம்.!! சிம்பிள் ரெசிபி.!!

இப்போது வடிகட்டிய கடலை பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்றாக மசியும் வரை அறைக்கவும். இதனுடன் பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இப்போது பீட்ரூட் மசாலாவை இதனுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மொறு மொறுவென பொரித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் கோளா ரெடி.

இதையும் படிங்க: யம்மி... தித்திக்கும் கேரளா ஸ்டைல் நெய் அப்பம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி.!!