யம்மி... தித்திக்கும் கேரளா ஸ்டைல் நெய் அப்பம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி.!!simple-and-tasty-kerala-style-ghee-appam-recipe

கேரளா பாரம்பரியமான உணவு கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. கேரளாவை அடிப்படையாகக் கொண்ட சில உணவுகள் மிகவும் சுவையானவை. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் நெய் அப்பம். இதனை வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்று நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு 1 கப், ரவை 2 ஸ்பூன், மைதா 2 ஸ்பூன், வெல்லம் ½ கப், வாழைப்பழம் 2, தேங்காய் துண்டுகள் சிறிதளவு, கருப்பு எள் 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் ¼ ஸ்பூன், நெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Healthy life

செய்முறை

முதலில் 2 வாழைப்பழங்களையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மைதா, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இவற்றுடன் வாழைப்பழத்தையும் சேர்க்கவும். இப்போது பாகு தயாரிக்க அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வெல்லம் சேர்த்து பாகு தயாரித்துக் கொள்ளவும். 

இதையும் படிங்க: யம்மி... சுவையான மின்ட் லஸ்ஸி வீட்டிலேயே செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி.!!

பின்னர் கரைத்து வைத்துள்ள மாவில் பாகை ஊற்றி கட்டிப்பிடிக்காமல் நன்றாக கிண்ட வேண்டும். பின்னர் மாவுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், கருப்பு எள் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும். இப்போது அடுப்பில் பணியாரம் செய்யும் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி நன்றாக உருகி சூடானதும் நாம் தயாரித்து வைத்திருக்கும் மாவை எடுத்து நெய்யில் ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையான நெய் அப்பம் ரெடி.

இதையும் படிங்க: வாவ்.. இது புதுசா இருக்கே.!! பருப்பு இல்லாமல் கமகமக்கும் சாம்பார்.!! சிம்பிள் ரெசிபி.!!